சொல் பொருள்
பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
மேலே, முள்தோல்; அதனுள்ளே, வழுக்கைத்தோல்; அதனுள், பசைத்தோல்; அதனுள்ளே, சுளை; அதன் உள்ளே, விதை அல்லது கொட்டை. அதற்கும் மேல்தோல்; இவ்வாறு விலக்கி ஒதுக்கப்படும் கோது (சக்கை) மிகப் பலவாக இருத்தலால் பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்