சொல் பொருள்
சட்டம் – அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை
திட்டம் – சமுதாயத்தால் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை.
சொல் பொருள் விளக்கம்
“சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்” என்று வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் நாகரிக நாடுகளுக்கெல்லாம் பொதுவிதி. சட்டங்கள் அரசால் அல்லது அரசின் அமைப்பால் உருவாக்கப் பெற்றாலும் சமுதாய அமைதியையும் நன்மையையும் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று விலக்கமில்லாத் தொடர்பினவாம். ஆனால் தனித்தன்மை உடையனவாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்