சொல் பொருள்
‘பல’ என்பதை விலக்கிச் சரக்கு என்றாலே மசாலையைக் குறிப்பதாக யாழ்ப்பாண வழக்கு உண்டு
சரக்கு – சாராயம்
சொல் பொருள் விளக்கம்
பலசரக்கு என்பவற்றுள் பலவும் உசிலை எனப்படும் மசாலைப் பொருள்களேயாம். சரக்கு என்பவை உலர் பொருள்களானவை. ‘பல’ என்பதை விலக்கிச் சரக்கு என்றாலே மசாலையைக் குறிப்பதாக யாழ்ப்பாண வழக்கு உண்டு.
சரக்கு என்பது காய்ந்த பொருளாம். பல சரக்குக் கடையில் உள்ளவை உலர்ந்து காய்ந்த பொருள்களே என்பதை அறிக. உலர்ந்த பட்டைகளைத் தட்டிப்போட்டு ஊறவைத்து வடித்துக் காய்ச்சுவது சாராயம். ஆதலால் அதனைச் சரக்கு என்பது வழக்காயிற்று. ‘பட்டைச் சாராயம்’ என்பதும் அதன் மூலப் பொருளை விளக்குவதாம். “சரக்கு முறுக்கா? வணிகர் முறுக்கா?” என்பதிலுள்ள ‘சரக்கு’ என்னும் பொருளது. “சரக்குப் போட்டிருக்கிறான் போலிருக்கிறது; நடையும் பேச்சும் தெரிகிறதே” என்பதில் சரக்கின் பொருள் விளக்கமாம். அது, கள் சாராயம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்