Skip to content

சொல் பொருள்

சலசலப்பு – அச்சுறுத்தல்

சொல் பொருள் விளக்கம்

“இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால் சலசலப்பு அச்சமற்றது அது. “இந்தச் சலசலப்புக்கெல்லாம் இந்த நரி அஞ்சுமா?” என்றும் தம்மை நரியாகக் கூறுவர். சலசலப்பு ஒலிக்குறிப்பு. நீரோட்டம், இலையசைவு, கலம் கருவியொலிகள் ஆயவை சலசலப்பாம். இச்சலசலப்பு, அச்சப் பொருளில் வருதல் வழக்கு வழிப்பட்டதாம். “அந்தச் சலசலப்பை இங்கே வைத்துக்கொள்ளாதே” என்பது எச்சரிப்பாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *