சொல் பொருள்
பயிருக்கு நீர்பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல் தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பயிருக்கு நீர்பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல் தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு. ஈரம் இருப்பதால் சலசலத்து ஓடும் நீரைச் சல் தண்ணீர் என்பது ஒலிக்குறிப்பு வழிப்பட்டது. சலசல, சலசலப்பு, சலவை, சலதாரை, சலவன், சல் பிடித்தல் என்பனவெல்லாம் ஒலிக்குறிப்புத் தோற்ற வழிவந்தவை. சலுப்புத் தண்ணீர் என்பது வட மதுரை வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்