சொல் பொருள்
தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது. முள் மரத்தில் ஏறிப் பறிக்க இயலாது. பிடித்து உலுப்பவும் இயலாது. ஆனால் தொரட்டி கொண்டு வளைக்கவோ, பறிக்கவோ, உலுப்பவோ எளிதாக இயலும். ஆதலால் சல்லை என்னும் வழக்கு உண்டாயிற்று. சல்லிது(சு) என்பது எளிது, குறைந்தது என்னும் பொருளில் வழங்கும் வழக்குச் சொல்லாக இருப்பதால் அறியலாம். சல்லிசாகப் பறிக்கலாம்; சல்லிசாக வாங்கலாம் என்பவை வழங்கு மொழிகள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மிக்க நன்றி நண்பர்களே!