1. சொல் பொருள்
சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது
அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது.
2. சொல் பொருள் விளக்கம்
சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது. சாங்கியம் பெரும்பாலும் மகளிர் முன்னின்று செய்யும் சடங்கையே ஆகும். சடங்கியம் என்பது சாங்கியம் என்றாகியது எனலாம். இனி, அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. சடங்குகளில் வழிவழியாகச் சொல்லப்படும் தொடர்களை முதற்கண் குறித்து, பின்னர்
பழமொழியைக் குறித்ததாகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்