சொல் பொருள்
திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்’ என்பது வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
‘சாடை’ என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் ‘சாடையம்’ என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது. ஒருவர் ‘நடையுடை’ ஒப்பக் கொண்டு மேடையேற்றுவது நாடகம் (கூத்து) ஆகும். திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்’ என்பது வழக்காகும். ஒப்ப அமைந்த உடைக்கோலமே கண்டதும் அடையாளம் காண வைக்கும். அரிய சொல்வழக்கு ஈதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்