சொல் பொருள்
சாட்டை என்பதற்கு ‘நீளம்’ என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர்.
சொல் பொருள் விளக்கம்
சாட்டைக் கம்பு அல்லது சாட்டைக் கோல் நீளத்தினும் அதில் கட்டப்பட்ட வார் நீண்டிருக்கும். வார் = நீளம். ஆதலால் சாட்டை என்பதற்கு ‘நீளம்’ என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். கம்பில் இருந்து தொங்கும் வாரின் தொங்குதல் நீளம் ஆயவை குறித்து ஒப்புமைப் பொருள் வகையால், ‘சடை’ என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குகின்றனர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்