Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சந்தன மரம், 2. சந்தன

சொல் பொருள் விளக்கம்

1. சந்தன மரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sandalwood tree

sandal paste

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி – நற் 64/4-6

குறவர்கள்
அறியாமல் அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
காய்ந்துபோய் மிகவும் கெட்டு

இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/7-9

நடுவழியில் மேகங்கள் மழை பெய்ததாக, மார்பிலுள்ள
சிறிய புள்ளிகளைக் கொண்ட சந்தனத்தோடு
நறிய, குளிர்ந்த நெஞ்சத்தினனாய்த் திரும்புகின்றான் போலும். இதற்கு நோவேனோ நான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *