Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம், 2. விழுது, மென்கலவை,

சொல் பொருள் விளக்கம்

1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sandal wood tree, sandal wood, sandal paste, Paste

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4

சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல

வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து – நற் 351/6,7

வேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனக் கடைகளால் செய்த
களிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில்

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193

நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;

வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44

உருக்குலைந்துபோன கத்தூரி மென்கலவை நிறைந்த மார்பினையுடைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *