Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மென்மை, 2. வனப்பு, அழகு, 3. மேனி,

சொல் பொருள் விளக்கம்

1. மென்மை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tenderness, loveliness, gracefulness, beauty, body

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214

ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37

மென்மையான வனப்பையும், முத்தை ஒத்த பல்லினையும்,

புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 61

புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *