Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆவி பிடித்த நிலையில் இறைவாக்கு உரைக்கும் பெண்,2. அருந்ததி,

சொல் பொருள் விளக்கம்

1. ஆவி பிடித்த நிலையில் இறைவாக்கு உரைக்கும் பெண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

woman who pronounces oracles under the influence of sprit

Wife of Vasiṣṭha

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப – மது 609,610

முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க

வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/43-45

வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *