சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. தலைமயிர் முடிப்பு, 2. தலைமாலை, தலை அல்லது உச்சி மாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hair knot
Arched wreaths of flowers over the head of an idol or a great person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் – கலி 54/6,7 பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை – கலி 96/9 ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும், அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்