சொல் பொருள்
சிக்கெடுத்தாற் போலிருத்தல் – தொல்லை தீர்தல்
சொல் பொருள் விளக்கம்
தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் இல்லாக்கால் சிக்கு உண்டாம். கற்றை கற்றையாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு ஆகியவை நீளச்செல்லும்போது சிக்கல் பட்டு விடுவதும் உண்டாம். தொண்டை, பல்லிடுக்கு ஆகியவற்றில் ஏதாவது பொருள் சிக்கி இடர் தருவதும் உண்மையே. இச் சிக்கலுள் எவையாயினும் எடுக்கப்பட்டால் அன்றி ஒழுங்காவதில்லை. நலம் செய்வதில்லை. இச்சிக்கல்கள் போலவே வாழ்வியற் சிக்கலும் ஏற்படுவது மிகுதி. அச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு அல்லல் பட்டவர்கள் அவை தீர்ந்த மகிழ்வில் “இப்பொழுதுதான் சிக்கெடுத்தாற் போலுள்ளது” என்பர். சிக்கல் – தொல்லை, சங்கடம். சிக்கலை ஆக்குவதே சிலர் வேலை. அவரைச் சிக்கல் சிங்கார வேலர் என்று உள் நகைப்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்