சொல் பொருள்
சிணுங்குதல் – வேண்டி நிற்றல், மழை தூறுதல்
சொல் பொருள் விளக்கம்
சிணுங்குதல் – என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது, அச்சிணுங்குதல். அதனால், தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செடீநுயப்படுவது. அழுது அடம் பிடித்தல் என்பது வன்மைப்பட்டது. இது இயலாமைப்பட்டது. கேட்டது உடனே கிடைக்கத் தடையோ மறுப்போ உண்டாயின் குழந்தைகள் சிணுங்கியும் கண்ணைக் கசக்கியும் இரக்கத்தை உண்டாக்கிப் பெற்றுவிடுவர். அதனால் வேண்டுதற்பொருள் உண்டாயிற்று சிணுங்கும்போது சில சில துளி கண்ணீர் வருவதுண்டாகலின் அம்மாதிரி துளிர்க்கும் மழையைச் சிணுங்குதல் என்பதும் வழக்கமாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்