சொல் பொருள்
சிண்டு முடிதல் – (இருவருக்குள்) பகையாக்கல்
சொல் பொருள் விளக்கம்
சிண்டு, சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதில்லை இது. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடுவதைக் குறிப்பதாகவுள்ளது. இருவர் சிண்டையும் முடிந்தால் முட்டாமல் மோதாமல் முடியாதே! சிண்டு முடிதல் என்பது சிக்கலையுண்டாக்கிப் பகை ஏற்படுத்துவதாக அமைகின்றது. தலையிரண்டை ஒன்றாய் முடித்துப் போட்டு ஒட்டுதல் அல்லது அறுத்தல் ஆகியவை ஒரு காலத்தில் தண்டனை வகைகளுள் ஒன்றாக இருந்து, இவ்வழக்கு உண்டாகியிருக்க வேண்டும். ஒட்டக்கூத்தர் தந்த தண்டனையாகத் தனிப்பாட்டு ஒன்று கூறும் இதனை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்