சொல் பொருள்
சிண்டு வைத்தல் – ஏமாறுதல்
சொல் பொருள் விளக்கம்
கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு, சிறுகுடுமி, “என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார்” என்பதும், “சிண்டு முடிந்து பூச்சுற்றிய வனைப்பார்.” என்பதும், “நான் ஏமாற மாட்டேன்; ஏமாறுகிற ஆளைப்பார்” என்பதாம். சிண்டு முடிந்தவர்கள், கல்வி சூழ்ச்சித் திறம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் எழுந்துள்ள வழக்கு இது. சாணக்கியன் சிண்டு என்ன எளிய சிண்டா? காதில் பூச்சுற்றலும் இத்தகைத்தே, சிண்டு முடிந்தவன் நாடாள்பவன் முடியையே பிடித்து ஆட்டியது இந்திய – தமிழக – வரலராறு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்