சொல் பொருள்
(பெ) 1. கிளை, 2. கருக்கொண்ட நிலை, சூல், 3. சிலந்தி வாயினால் செய்யும் வலை, 4. முட்டை
சொல் பொருள் விளக்கம்
1. கிளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
branch, pregnancy in animals, cobweb, egg
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23 செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர்களை விரும்பி சினை சுறவின் கோடு நட்டு – பட் 86 சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு, கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கான புறவின் சேவல் வாய் நூல் சிலம்பி அம் சினை வெரூஉம் – நற் 189/7-9 கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிப் பறந்துபோன காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும் சிலந்தியின் அழகிய வலையைக் கண்டு வெருண்டோடும் உகாஅத்து இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/1,2 உகாய் மரத்தின் இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்