சொல் பொருள்
(வி.எ) சினந்து என்பதன் திரிபு
சொல் பொருள் விளக்கம்
சினந்து என்பதன் திரிபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
being angry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசு பகை தணிய முரசு பட சினைஇ ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/1,2 அரசனின் பகையுணர்வு தணியும்படியும், முரசின் ஒலிகள் ஓயும்படியும், சினங்கொண்டு மிகுந்த முழக்கத்தோடு மேகங்கள் கார்காலத்தைத் தொடங்கிவிட்டன; சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப துனைஇய மாலை துன்னுதல் காணூஉ – குறி 229,230 சினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று விரைந்துவரும் மாலை நெருங்கிவருதலைக் கண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்