சொல் பொருள்
சின்னது – இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை.
நணியது – பிறந்து அணியதாம் குழந்தை.
சொல் பொருள் விளக்கம்
சின்னது நணியது எல்லாரும் நலமா?’ என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை. நண்ணுதலையுடையது நணியது ஆயிற்றாம். நணியது ‘புனிறு’ என வருதல் இலக்கிய வழக்கு. நணியது என்பதன் நெருக்கத்தைக் “ குறுநணி காண்பதாக நம்முள்” என்னும் புறநானூற்று அடி கூறும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்