சொல் பொருள்
(வி) 1. ஒலி எழுப்பு, 2. எதிரொலி
(பெ) 1. தண்டை போல் காலில் அணியும் அணி, 2. மலைச் சரிவில் இருக்கும் ஏறக்குறைய சமதளமான பகுதி,
சொல் பொருள் விளக்கம்
1. ஒலி எழுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make a tinkling sound, echo, resound, anklet, mountain side with an almost plain land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/3 நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப்பறை ஒலிக்குமாறு கொட்டி வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/13 சுரபுன்னைகள் செறிந்து இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற சேவடி சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/8,9 சிவந்த அடிகளில் சிலம்புகள் விளங்க நடந்து சென்ற என் மகளுக்கு கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 14,15 கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைவெளியில் பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே, இந்த மலைவெளியில் ஊர்கள் இருக்கும். நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238 செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி, மயில்கள் களித்து ஆடிக்கொண்டிருக்கும். மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி – பெரும் 330,331 பெருமையையுடைய மலையின் வெளிகளில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையையுடைய மயில் போல் உலாவி யானைகள் படுத்துக்கிடக்கும். காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு – பெரும் 372 காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கியிருப்பதால் வாழைகள் செழித்து வளரும். படு நீர் சிலம்பில் கலித்த வாழை – நற் 188/1 குறவர்கள் மலைநெல்லைப் பயிரிடுவர். மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2 மேகங்கள் படியும் மலைவெளியில் மலைநெல்லை விதைத்து மேற்கண்ட காரணங்களால், சிலம்பு என்பது ஒரு மலைச்சரிவில் அமைந்த ஏறக்குறைய ஒரு சமவெளிப் பகுதி என்பது பெறப்படும். இருப்பினும், இது மலைப்பகுதியாதலால், சிகரங்கள் வானை முட்டும்படி இருக்கும். செங்குத்தான பகுதிகளில் அருவிகள் ஆர்ப்பரித்துக்கொட்டும். அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் வான் தோய் மா மலை – நற் 365/7,8 அருவியில் ஆரவாரத்துடன் நீர் விழும் நீர்வளம் மிக்க மலைச் சரிவையுடைய வானத்தை எட்டும் பெரிய மலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்