சொல் பொருள்
சிலுக்கட்டி – சிறியது
சொல் பொருள் விளக்கம்
மிகக் குள்ளமானவர் – கனமுமில்லாதவர் – சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக் கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில் ஆக்கப்படுவது. அச்சுக் கட்டி அதனிற் பெரியது. வட்டு அதனினும் பெரியது தேங்காயை உடைத்துக் கீற்றுப் போட்டது. ‘சில்லு’ எனப்படும். சிறு குருவி ‘சில்லை’ எனப்படும். இவையெல்லாம் சிறியது (சின்னது) என்னும் பொருள். ‘என் சில்லைக்குடில்’ என்பது சிலப்பதிகாரம். சில், சிலு சில்லை என்பவையெல்லாம் ஒருவழிய. “சிலுக்கட்டி வண்டி” “சிலுக்கட்டியாள்” ‘சிலுக்கட்டிப் பிள்ளை’ என்பவை வழக்குகள். மிகச்சிறிய உந்தினைச் “சிலுக்கட்டிக்கார்” என்பதும் கேட்கக் கூடியதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்