Skip to content

சீராட்டும் பாராட்டும்

சொல் பொருள்

சீராட்டு – ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல்.
பாராட்டு – ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம்.

சொல் பொருள் விளக்கம்

சீர்-சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று. சிறப்பிலாத் தன்மைகள் உளவாயின் அவற்றைக் கூறாது விடுப்பினும் இல்லது கூறுதல் இல்லையாய் சிறப்பை மட்டும் தேர்ந்து கூறுவது இதுவாம்.

பார்- பரவிய தன்மையது, குறையுடையவை. இருக்கு மாயினும் அவற்றைக் கூறாததுடன் இல்லாத தன்மைகளையும் இயைத்து இனிது மகிழப் புனைந்து கூறுதல் பாராட்டாகாது. ஆனால் இதுகால் சீராட்டும் பாராட்டும் ஒப்ப இயல்கின்றன.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *