சொல் பொருள்
1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, 2. (பெ) பிசிர்
சொல் பொருள் விளக்கம்
யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rub clean and smooth, as a lute string
Small splinter or fibre rising on a smooth surface of wood or metal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் அரலை தீர உரீஇ – மலை 22-24 கடுகளவும் இசைச் சுருதியில் தவறு இல்லாது ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய தேய்த்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில் கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/12,13 துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன புறத்தையுடைய தடாரிப்பறையின் தோலில் ஒட்டிக்கிடந்து காய்ந்து பொருக்காக இருக்கும் ஊன் பிசிர் சூழஇருக்கும் தெளிந்த முகப்பை அறைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்