சொல் பொருள்
சுக்காதல் – உலர்ந்து போதல், மாவாதல்
சொல் பொருள் விளக்கம்
சுக்கு நீரை அறவே இழந்தது, நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு உரியதாயிற்று. சுக்காக நொறுக்குதல் என்பதில் சுக்கு என்பதற்கு மாவு என்னும் பொருள் உள்ளமை வெளிப்படும். “சுக்காக நொறுங்கி விட்டது” என்பது வழக்காட்சி. சுக்குச் சுக்காக நொறுங்கிவிட்டது என்பது மிக நொறுங்குதலைக் குறிப்பதாம். “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?” என்பது ஒரு தனிப்பாட்டு. பாறை வகையுள் ஒன்று சுக்காம் பாறை. சுக்காம் பாறை ஓர் ஊர், சுக்காலியூர் சுக்கு திரிகடுகத்தில் முதலாவது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்