சொல் பொருள்
(பெ) 1. பூந்தாது, 2. வண்ணப்பொடி
சொல் பொருள் விளக்கம்
1. பூந்தாது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pollen dust
saffron mixed powder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 220,221 பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின் புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும், சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் கூந்தலும் பித்தையும் சோர்ந்தன – பரி 24/84,85 சந்தனமும்,மணங்கமழும் தாரும், கோதையும், நறுமணப் பொடிகளும் மகளிர் கூந்தலிடத்திலிருந்து மைந்தர் பித்தையிடத்திலிருந்தும் நழுவி வீழ்ந்தன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்