சொல் பொருள்
(பெ) 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை,
2. சுண்ணாம்புக்கலவைப் பூச்சு,
சொல் பொருள் விளக்கம்
1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lime, lime mortar
lime plaster
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாலிய சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2 வெண்மையான சுண்ணாம்பு வெந்து விரிந்திருப்பதைப் போன்ற பலவான பூக்களைக் கொண்ட வெண்கடப்பமரம் வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110 வெள்ளியைப் போன்ற ஒளிரும் சுண்ணாம்புச்சாந்தை வாரிப்பூசி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்