சொல் பொருள்
சுருட்டி மடக்கல் – அடங்கிப்போதல்
சொல் பொருள் விளக்கம்
பூனையையோ பன்றியையோ கண்டு சீறிப்பாய்ந்து குரைக்கும் நாய், தன்னில் வலிய நாய் வந்தால் வாலைச் சுருட்டி மடக்கி இரண்டு கால்களுக்கும் இடையே வைத்துக் கொண்டு ஓடும். அதுபோல் ஏழை எளியவரைப் பாடாப்பாடுபடுத்தும் சிலர், வலிமையானவர்களைக் கண்ட அளவில் தமது வாயை மூடி, கைபொத்தி, குனிந்து வளைந்து சொன்னதைக் கேட்டு நடப்பர். இத்தகையவரை “அடாவடிக்காரனைப் பார்த்தால் வாலைச் சுருட்டிக் கொள்வான்; ஆளைப்பார் ஆளை; இப்பொழுது அவனை மருட்டட்டுமே” என்பர். சுருட்டி மடக்கல் வலிமையைக் கண்டு நிமிருமா? மெலிமைக்கன்றோ நிமிரும்?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்