சொல் பொருள்
சுருள் வைத்தல் – பணம் தருதல்
சொல் பொருள் விளக்கம்
சுருள் வைத்தல், சுருள் வைத்து அழைத்தல் என்பனவும் வழக்கில் உள்ளனவே. சுருள் என்பது பணத்தைக் குறிக்கிறது. ‘சுருள்பணம்’ எவ்வளவு வந்தது என்பதில் பொருள் தெளிவாக உள்ளது. ஆனால் சுருளுக்கும் பணத்திற்கும் என்ன தொடர்பு? வெற்றிலையைச் சுருள் என்பது வழக்கு. சுருட்டி மடக்கித் தருதல் என்னும் வழக்கில் இருந்து அது வந்தது. அதில் பணம் வைத்து வழங்குதல் உண்மையாதல் சுருள் என்பதற்குப் பணம் என்னும் பொருள் உண்டாயிற்றாம். ‘இலைவயம்’ காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்