சொல் பொருள்
சுற்றிவளைத்தல் – நேரல்லாவழி
சொல் பொருள் விளக்கம்
“வட்டம் சுற்றி வழியேபோ” என்பது பழமொழி. உரிய வழிப்படி போதல்வேண்டும் என்பதைக் குறிப்பது அது. இச்சுற்றிவளைப்பு அத்தகையதன்று. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து, அதற்குச் சார்பான மற்றவற்றைப் பேசித் தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலே சுற்றி வளைத்தலாம். சுற்றி வளைத்தல் வேட்டைத் தொழிலில் காணக் கூடியது. குறிவைத்துக் கொண்டு ஒருவர் ஓரிடத்து இருப்பார். பிறர் வேட்டை விலங்குகளைச் சுற்றி வளைத்துக் குறிக்குக் கொண்டு வந்து சேர்ப்பர். வேட்டையர் நோக்கு வெற்றியாக நிறைவேறிவிடும். ஆகலின் நேரல்லா வழி என்னும் பொருளது ஆயிற்று. நேரல்லாமை நேர்மை அல்லாமை தானே. வட்டம் சுற்றி வழியே போ என்பது பழமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்