சொல் பொருள்
செங்கல் – செவ்வானமாகத் தோன்றும் மாலைப் பொழுது.
மங்கல் – செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது.
சொல் பொருள் விளக்கம்
நான் அங்கே போகும் போது செங்கல் மங்கல் பொழுதாக இருந்தது என்பது வழக்கு.
சுடுமண் செந்நிறம் பெறுதலால் ‘செங்கல்’ எனப்படுவது அறிக.
மங்கல் என்பது செந்நிறம் மங்கி இருள் வருதலைக் குறித்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்