சொல் பொருள்
செடி என்பது நாற்றம் என்னும் பொருளில் வழங்கும்
செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும்
செடி – நாற்றம்
சொல் பொருள் விளக்கம்
செடி என்பது நாற்றம் என்னும் பொருளில் வழங்கும். மரம் செடி கொடி என்னும் இயற்கையுள் ஒன்றாகிய செடி இருட் போதில் ஆடுதலும் அதன் நிழலசைவும் அச்சம் உண்டாக்கக் கண்டவர்கள் செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும். “ஓராளும் கறுப்பு உடையும் பேய்” என்று அஞ்சுதலைப் பாவேந்தர், பாண்டியன் பரிசில் குறிப்பிடுவார்.
செடி, இலை, வேர், பட்டை இவற்றுக்கு வெவ்வேறு மணம் உண்டு. பூக்களோ, மணம் பரப்புதல் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. நன்னாரி வேர், வெட்டிவேர் நறுமையான மரு, மருதோன்றி, பச்சை, துளசி இலைகள் மணமுள்ளவை வேம்பு, அதிமதுரம், கடுக்காய் முதலிய பட்டைகளும் மணமுள்ளவை. ஆனால் சில செடிகள் மிகத் தொலைவுக்குக்கூட மூக்கை வருத்தும் நாற்றம் உடையவையாக உள்ள அவற்றால் ‘செடி’ என்பதற்கு, நாற்றப் பொருள் உண்டாயிற்று ‘செடி’ என்பது நூறு பவுனைக் குறிக்கும் வசைச் சொல்லும் ஆயிற்று. ‘செடிப்பயல்’ என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்