சொல் பொருள்
(வி) 1. ஒளி முதலியன மழுங்கு, 2. உறுதி தளர்
சொல் பொருள் விளக்கம்
1. ஒளி முதலியன மழுங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lose lustre, get blunt
become feeble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புது கண் மாக்கள் செது கண் ஆர பயந்தனை-மன்னால் – புறம் 261/8-10 நெய் காய்கின்ற உலையில் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஓசையெழுப்பும் பொரியலை புதிய மாந்தருடைய ஒளி மழுங்கிய கண்கள் நிறைய உண்டாக்கினாய் முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14 முதுமை வாய்த்த பெண்ணின் உறுதிதளர்ந்து சோர்ந்த காலினையுடைய குடிலினில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்