சொல் பொருள்
(வி) 1. சொல், 2. வழிபடு,
2. (பெ) உலோகமாகிய செம்பு, 3. நீர் வைக்கும் கரகம், பாத்திரமாகிய செம்பு,
சொல்லுதல், செம்பால் ஆகியது
துடைப்பம்
சொல் பொருள் விளக்கம்
சொல்லுதல், செம்பால் ஆகியது என்னும் பொதுப் பொருளில் நீங்கிச் செப்பு என்பது, செப்பம் செய்யும் கருவிப் பொருளாகக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பம் என்பது அதன் பொருள். செப்பம் = செம்மை, தூய்மை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
say, declare, worship, copper metal, A kind of water-vessel
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்று நாம் கூறி காமம் செப்புதும் செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று – நற் 79/6-8 பிரிந்து செல்ல எண்ணுவதைக் காட்டிலும் கொடியதும் ஒன்று உண்டோ? என்று நாம் கூறி நமது ஆசையைச் சொல்லுவோம்; அவ்வாறு சொல்லாமல் விட்டுவிட்டால் எம் உயிருக்கே கேடு வரும்; பகை பெருமையின் தெய்வம் செப்ப ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/1,2 உன்னுடைய பகைமை பெரிதாகையால், உன் பகைவர் தெய்வத்தை வழிபட, இனிதாகத் தங்குவதற்கு அரிதான இருப்பிடமாயினும் வீரர்கள் அஞ்சாத, பகைவர்க்கு அச்சந்தரக்கூடிய பாசறையில் அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/3,4 அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின் செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம் கொம்மை வரி முலை செப்புடன் எதிரின – குறு 159/4 பெரிய, தேமல் வரிகளைக் கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்