சொல் பொருள்
நன்னன் என்பானின் நவிரமலையுள்ள நாட்டில் ஓடும் ஆறு
சொல் பொருள் விளக்கம்
மலைபடுகடாம் பாட்டுடைத்தலைவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய்
நன்னன் என்பானின் நவிரமலையுள்ள நாட்டில் ஓடும் ஆறு சேயாறு. இது திருவண்ணாமலைப் பகுதியாகும்.
இப்போது இந்த ஆறு செய்யாறு எனப்படுகிறது. இந்த ஆறு பாலாற்றின் துணை ஆறு ஆகும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 476,477 காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின் புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகி தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 551,556 அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய், “எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய், தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர், உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின் வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின் 555 கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்