சொல் பொருள்
(பெ) 1. சேரநாட்டு வீரர், 2. சேரர்குடி, 3. சேர அரசர்,
சொல் பொருள் விளக்கம்
சேரநாட்டு வீரர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
soldiers of chera country
the chera desent, chera lineage
the chera kings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செ உளை கலிமா ஈகை வான் கழல் செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே – பதி 38/7.8 சிவந்த பிடிரியினையுடைய குதிரைப்படையும், பொன்னாற்செய்த உயர்ந்த கழலையும் வேலைப்பாடு அமையத் தொடுத்த கண்ணியையும் அணிந்த சேரநாட்டுக்காலாட்படையும் உடைய வேந்தே – சேரநாட்டுக் காலாட்படை வீரரை, சேரலர் என்றார் – ஔ.சு.து.உரை, விளக்கம். செல்வக்கோவே சேரலர் மருக – பதி 63/16 செல்வக்கடுங்கோவே, சேரர்குடித் தோன்றலே சேரலர் சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நன்கலம் – அகம் 149/7-9 சேர அரசரது சுள்ளியாகிய பேரியாற்றினது வெள்ளிய நுரை கலங்க யவனர்கள் கொண்டுவந்த தொழில்மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்