Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கரைப்பெண்டு

சொல் பொருள் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம் சொல் பொருள் விளக்கம் சிலதொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப்பட்டு வந்தன. அவற்றுள் கரை காவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை… Read More »கரைப்பெண்டு

கரைசோறு

சொல் பொருள் மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும்.… Read More »கரைசோறு

கருமத்த மாடு

சொல் பொருள் எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர்,… Read More »கருமத்த மாடு

கருப்பம்புல்

சொல் பொருள் கருப்பம்புல் என்பது பொது வகையில் கரும்பைக் குறியாமல் விதைக் கரும்பைக் குறிப்பதாக எறையூர் (இறையூர்) வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் கரும்பு புல்லினப் பயிராகும். அது கருப்பு என… Read More »கருப்பம்புல்

கருக்கடை

சொல் பொருள் கூர்மையும் வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மை யான முள் உடையது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும்… Read More »கருக்கடை

கரியிலை

சொல் பொருள் காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. காயும் ஒன்று கருநிறம் அடைதலும், சருகு ஆதலும்… Read More »கரியிலை

கரிக்கால்

சொல் பொருள் கருவூர் வட்டார வழக்கில் வெள்ளையாட்டைக் கரிக்கால் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் வெள்ளையாட்டைப் பார்த்தால் கரிய ஆடுகளையும் காணலாம். ஆனால் வெள்ளையாடு என்பதே வழக்கு. இதனால் காராட்டை வெள்ளையாடு எனல்… Read More »கரிக்கால்

கரியாமணக்கு

சொல் பொருள் பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் ஆமணக்குப் போலும் இலையுடையதும், ஆமணக்கு இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது… Read More »கரியாமணக்கு

கரப்பெண்

சொல் பொருள் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில்… Read More »கரப்பெண்

கரப்பு

சொல் பொருள் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது… Read More »கரப்பு