Skip to content

சி வரிசைச் சொற்கள்

சி வரிசைச் சொற்கள், சி வரிசைத் தமிழ்ச் சொற்கள், சி என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சி என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சில்வாரி

சொல் பொருள் சில்வாரி – சின்னத் தனமானவன் சொல் பொருள் விளக்கம் ‘சில்’ என்பது சிறுமைப் பொருளது, ‘வாரி’ என்பது ‘மானவாரி’ என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வானவாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம்… Read More »சில்வாரி

சிணுங்குதல்

சொல் பொருள் சிணுங்குதல் – வேண்டி நிற்றல், மழை தூறுதல் சொல் பொருள் விளக்கம் சிணுங்குதல் – என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது, அச்சிணுங்குதல். அதனால்,… Read More »சிணுங்குதல்

சிண்டைப் பிடித்தல்

சொல் பொருள் சிண்டைப் பிடித்தல் – செயலற்றுப்போக நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் சிண்டாவது உச்சிக்குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச்செயலில் இருந்து பலவகையாலும் நெருக்கடியுண்டாக்கி… Read More »சிண்டைப் பிடித்தல்

சிண்டு வைத்தல்

சொல் பொருள் சிண்டு வைத்தல் – ஏமாறுதல் சொல் பொருள் விளக்கம் கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு, சிறுகுடுமி, “என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார்” என்பதும், “சிண்டு… Read More »சிண்டு வைத்தல்

சிண்டு முடிதல்

சொல் பொருள் சிண்டு முடிதல் – (இருவருக்குள்) பகையாக்கல் சொல் பொருள் விளக்கம் சிண்டு, சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதில்லை இது. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடுவதைக் குறிப்பதாகவுள்ளது. இருவர் சிண்டையும்… Read More »சிண்டு முடிதல்

சிங்கியடித்தல்

சொல் பொருள் சிங்கியடித்தல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கியடித்தலாம். இசை நிகடிநச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர், ஆகியவர்க்கு உரிய மதிப்பும்… Read More »சிங்கியடித்தல்

சிங்கி தட்டல்

சொல் பொருள் சிங்கி தட்டல் (சாலராப்போடல்) – ஒத்துப்பேசுதல். சொல் பொருள் விளக்கம் சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவியிசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய… Read More »சிங்கி தட்டல்

சிக்கெடுத்தாற் போலிருத்தல்

சொல் பொருள் சிக்கெடுத்தாற் போலிருத்தல் – தொல்லை தீர்தல் சொல் பொருள் விளக்கம் தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் இல்லாக்கால் சிக்கு உண்டாம். கற்றை கற்றையாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு… Read More »சிக்கெடுத்தாற் போலிருத்தல்