Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

அண்ணி

சொல் பொருள் அண்ணன் துணைவியார் அண்ணி; அணில் சொல் பொருள் விளக்கம் அண்ணன் துணைவியார் அண்ணி எனப்படுவார். இப்பொருளுடன், அண்ணி என்பது அணிலைக் குறித்தல் விளங்கோடு வட்டார வழக்கு. அணில் ஏதாவது தின்னும் போது… Read More »அண்ணி

அண்ணாக்கு

சொல் பொருள் உள்நாக்கு சொல் பொருள் விளக்கம் அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப்… Read More »அண்ணாக்கு

அடுக்குள்

சொல் பொருள் சமையலறை சொல் பொருள் விளக்கம் சமையலறையை அடுக்குள் என்பது உண்டு. கலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்படுவதும், வீட்டின் உள்பகுதியாக இருப்பதும் கருதிய பெயர் அடுக்குள் ஆகும். இது பார்ப்பனர் வழக்கு. குறிப்பு: இது… Read More »அடுக்குள்

அடி திரும்பல்

சொல் பொருள் உச்சி சாய்ந்த மாலைப் பொழுது சொல் பொருள் விளக்கம் அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் பொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். “அடித்திரும்பி… Read More »அடி திரும்பல்

அடிப்பாவாடை

சொல் பொருள் உட்பாவாடை சொல் பொருள் விளக்கம் பாவாடைக்கு உள்ளாக உடுத்திய பாவாடையை அடிப்பாவாடை (உட்பாவாடை) என்பது குமரி வட்டார வழக்கு. அடி, மரம் செடி கொடிகளின் வேரும் தூருமாம் பகுதி. மண்ணுள் இருந்து… Read More »அடிப்பாவாடை

அடி கொடி

சொல் பொருள் அந்தாதி சொல் பொருள் விளக்கம் அடி என்பது வேர்; கொடி என்பது வேரில் இருந்து தளிர்த்துப் படரும் கொடி. கொடியாவது அடியின் முடி. அந்தாதி என்பதை அடி கொடி என்பது யாழ்ப்பாண… Read More »அடி கொடி

அடவியான்

சொல் பொருள் வெளிப்படாமல் வீட்டுள் அடங்கிச் செறிந்து கிடப்பவன் அடவியான் சொல் பொருள் விளக்கம் அடவி என்பது காடு. அடர்ந்து – செறிந்து – விளங்குவதால் அடவி ஆயிற்று. வெளிப்படாமல் வீட்டுள் அடங்கிச் செறிந்து… Read More »அடவியான்

அடம் பிடித்தல்

சொல் பொருள் தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல் சொல் பொருள் விளக்கம் அடம்பிடித்தல் என்பது சொன்னதைக் கேளாமல், தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல்… Read More »அடம் பிடித்தல்

அட்டுக்குஞ்சு

சொல் பொருள் பொரித்த கோழிக் குஞ்சை அட்டுக்குஞ்சு என்பது கருவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பொரித்த கோழிக் குஞ்சை அட்டுக்குஞ்சு என்பது கருவூர் வட்டார வழக்கு. அட்டு என்பது நெருக்கப் பொருளது.… Read More »அட்டுக்குஞ்சு

அட்டி

சொல் பொருள் தடை சொல் பொருள் விளக்கம் “நீங்கள் நாளைக்கு வந்து அட்டியில்லாமல் வாங்கிக் கொண்டு போகலாம்” என்பது தென்னக வழக்குச் சொல். அட்டி = தடை. அடுத்து வைக்கும் முட்டு – முண்டு… Read More »அட்டி