Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

அட்டாலி

1. சொல் பொருள் மதில் மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை, பரண் 2. சொல் பொருள் விளக்கம் மதில் மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை. அதில் இருந்து காக்கும் வீரர் ‘அட்டாலைச் சேவகர்’ எனப்படுவர்.… Read More »அட்டாலி

அட்டம்

சொல் பொருள் வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம் சொல் பொருள் விளக்கம் வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம். அட்டம் சுழிக்காமல் என்பது ஊடு அல்லது குறுக்கே போகாமல் என்பதாம். விளையாட்டில் பயன்படுத்தும் சொல் இது.… Read More »அட்டம்

அசைப்பு

சொல் பொருள் தோற்றம் சொல் பொருள் விளக்கம் அசைப்பு = தோற்றம்; ஓர் அசைப்பில் இவன் அவனைப் போலுள்ளான் என்று கூறுவது முகவை வழக்கு. அசைப்பு என்பது கண்ணிமை அசைவதால் உண்டாகும் பார்வை. முழுமை… Read More »அசைப்பு

அசங்கு

சொல் பொருள் ஆசை சொல் பொருள் விளக்கம் ஆசை என்னும் பொருளில் அசங்கு என்னும் சொல் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகிறது. ஒன்றை அடைந்ததும் அதனை விடுத்து அடுத்த ஒன்றன்மேல் அசைந்து செல்லும் ஆசையை அசங்கு… Read More »அசங்கு

வேட்டி துண்டு கட்டல் – இறுதிக் கடன் கழித்தல்

சொல் பொருள் வேட்டி துண்டு கட்டல் – இறுதிக் கடன் கழித்தல் சொல் பொருள் விளக்கம் வேட்டி துண்டு கட்டல் என்பது நீத்தார் கடனில் நிறைவாகச் செய்யப்படுவதாம். மகளிர்க்குக் கோடி போடுதல் என்பதும், ஆடவர்க்கு… Read More »வேட்டி துண்டு கட்டல் – இறுதிக் கடன் கழித்தல்

வேகாரி

சொல் பொருள் வேகாரி – வெட்டிச்சோறு தின்னி சொல் பொருள் விளக்கம் வேகு ஆரி என்பவை சேர்ந்தது வேகாரி; வெந்ததை உண்பதை அன்றி வேறொரு வேலை செய்யாதவனை ‘வேகாரி’ என்பர். ‘வெட்டி’ என்றும், ‘தண்டச்சோறு’… Read More »வேகாரி

வேகாது

சொல் பொருள் வேகாது – நடைபெறாது சொல் பொருள் விளக்கம் “அந்தப் பருப்பெல்லாம் இங்கு வேகாது” என்பதொரு மரபுத் தொடர். பருப்பு சில வகைத் தண்ணீரில் வேகும். சில வகைத் தண்ணீரில் வேகாது. கடுந்தண்ணீர்,… Read More »வேகாது

வெற்றிலைவைத்தல்

சொல் பொருள் வெற்றிலைவைத்தல் – அழைத்தல் சொல் பொருள் விளக்கம் மங்கல நிகழ்வுக்கு அழைப்பார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் வழக்கு. முன்னாளில் திருமண அழைப்பு வெற்றிலை வைத்தலாகவே இருந்தது. இன்றைக்கும் தேடிவந்த ஒருவர்… Read More »வெற்றிலைவைத்தல்

வெற்றிலை போடுதல்

சொல் பொருள் வெற்றிலை போடுதல் – உவப்புறுதல் சொல் பொருள் விளக்கம் வெற்றிலை மங்கலப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. வெற்றிலை வைத்து அழைத்தல் திருமண அழைப்பாகும். வெற்றிலை தருதல் உறுதி மொழிதல், அமைதிப்படுதல் ஆயவற்றுக்கும் அடையாளமாம்.… Read More »வெற்றிலை போடுதல்

வெளுத்துக்கட்டல்

சொல் பொருள் வெளுத்துக்கட்டல் – வெற்றி பெறல் சொல் பொருள் விளக்கம் வெளுத்தல், அழுக்குப் போக்கல், வெள்ளையாக்கல் என்னும் பொருள. இருளகற்றல் என்பது வெளிச்சப் பொருள. இவ்வெளுத்துக்கட்டல் பளிச்சிடக் காட்டலாம். பத்துப்பேர்கள் ஒரு மேடையில்… Read More »வெளுத்துக்கட்டல்