Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

வாழாக்குடி

சொல் பொருள் வாழாக்குடி – மணந்து தனித்தவள் சொல் பொருள் விளக்கம் திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள்.… Read More »வாழாக்குடி

வாழ்க்கைப்படல்

சொல் பொருள் வாழ்க்கைப்படல் – மணம் செய்தல், மனைவியாதல் சொல் பொருள் விளக்கம் திருமணத்தை ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்பது புது வழக்கு. ‘வாழ்க்கைத் துணை “என மனைவியைத் திருக்குறள் கூறும். அதன் வழிவந்த படைப்பு… Read More »வாழ்க்கைப்படல்

வாலாட்டல்

சொல் பொருள் வாலாட்டல் – தலைப்படுதல்; செருக்குதல் சொல் பொருள் விளக்கம் “என்னிடம் வாலாட்டினால் ஒட்ட வெட்டிவிடுவேன்” என்பது வழக்குச் சொல். வால் இல்லாதவன் வாலாட்டுவானா? இல்லாத வாலை வெட்டுவதுதான் எப்படி? வாலாட்டுதல் நாய்… Read More »வாலாட்டல்

வாயைப்பிடுங்குதல்

சொல் பொருள் வாயைப்பிடுங்குதல் – சொல்லை வருவித்தல் சொல் பொருள் விளக்கம் பல்லைப் பிடுங்குதல் தெளிவாக உள்ளது. வாயைப் பிடுங்குதல் எப்படி? வாய் என்பது வாய்ச் சொல்லைக் குறிக்கிறது. என்னென்னவோ சொல்லி வாயை மூடியிருப்பவரிடமிருந்தும்… Read More »வாயைப்பிடுங்குதல்

வாயைக்கட்டுதல்

சொல் பொருள் வாயைக்கட்டுதல் – பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்; சொல் பொருள் விளக்கம் மானம் கருதாது அடங்கியிருத்தல். வயிற்றைக் கட்டுதல், சோற்றுப் பஞ்சத்தின் பாற்பட்டது. வாயைக் கட்டுதல் சோற்றளவுக்கு வாய்ப்பு இருந்தாலும் சுவை சுவையான… Read More »வாயைக்கட்டுதல்

வாயும் வயிறும்

வாயும் வயிறும்

சொல் பொருள் வாயும் வயிறும் – பிள்ளைகள் வாய் – பாலுண்ணும் குழந்தைவயிறு – வயிற்றிலுள்ள குழந்தை சொல் பொருள் விளக்கம் வாயும் வயிறும் – “அவள் இப்பொழுது வாயும் வயிறுமாக இருக்கிறாள்’ என்றால்… Read More »வாயும் வயிறும்

வாயாடி

சொல் பொருள் வாயாடி – ஓயாப்பேசி சொல் பொருள் விளக்கம் வாயாடுதல் உண்ணுதலுக்கும் ஆம் ஆயினும் அதனைக் குறியாமல் பேசுதல் பொருளில் வழங்குவது வழக்குச் சொல்லாம். ஓயாமல் பேசுபவரை வாயாடி என்பதும் பெரிய வாயாடி… Read More »வாயாடி

வாய் திறத்தல்

சொல் பொருள் வாய் திறத்தல் – பேசல் சொல் பொருள் விளக்கம் “என்னதான் சொன்னாலும் வாயைத் திறந்தால் தானே” என்பது பேசினால் தானே என்னும் பொருளதாம். ‘வாயைத் திற என மருந்து ஊட்டவோ உணவு… Read More »வாய் திறத்தல்

வாய்த்தூய்மை

சொல் பொருள் வாய்த்தூய்மை – பொய்புரட்டுப் பேசாமை சொல் பொருள் விளக்கம் பல் விளக்கல், கழுவுதல் ஆகியவை வெளிப்படையான வாய்த்தூய்மையாம். நாளைக்கு மூன்று வேளை பல் விளக்குவாரும், பத்து முறை வாய் கொப்பளிப்பாரும் கூட… Read More »வாய்த்தூய்மை

வாய்க்கரிசி போடல்

சொல் பொருள் இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது சொல் பொருள் விளக்கம் இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது. இறந்தவர் பயன்படுத்திய பொருள்களைக் கடைசி முறையாகப் படைப்பது… Read More »வாய்க்கரிசி போடல்