Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மேய்ச்சல்

சொல் பொருள் மேய்ச்சல் – வருவாய் சொல் பொருள் விளக்கம் ஆடு மாடு, மேய்தல் உடையவை; மேய்ப்புத் தொழிலும், மேய்ப்பரும், மேய்ச்சல் புலமும் உண்மை அறிந்தவை. இவ்வாடு மாடு மேய்தலை விடுத்துப் போனபோன இடங்களிலெல்லாம்… Read More »மேய்ச்சல்

மேடேறுதல்

சொல் பொருள் மேடேறுதல் – மேனிலையடைதல், கடன் தீர்தல் சொல் பொருள் விளக்கம் பள்ளத்தில் இருந்து மேடேறுதல் பெரும்பாடு. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு வருதல் எளிமை. மேடேறப் பெருமுயற்சி வேண்டும். முயற்சியில்லாமல் இருந்தாலே போதும்.… Read More »மேடேறுதல்

மேட்டிமை

மேட்டிமை

மேட்டிமை என்பதன் பொருள் பெருமை; தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு. 1. சொல் பொருள் மேட்டிமை – பெருமை, அகந்தை, தலைமை, மேன்மை தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »மேட்டிமை

மெச்சக் கொட்டல்

சொல் பொருள் மெச்சக் கொட்டல் – பாராட்டல் சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது பாராட்டுவதற்கு அடையாளமாக ‘இச், இச்’ என நாவால் ஒலி எழுப்புவதை மெச்சக் கொட்டல் என்பது வழக்கு.… Read More »மெச்சக் கொட்டல்

மூடம்

சொல் பொருள் மூடம் – கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல் சொல் பொருள் விளக்கம் மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறியாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால்… Read More »மூடம்

மூட்டை கட்டல்

சொல் பொருள் மூட்டை கட்டல் – புறப்படல் சொல் பொருள் விளக்கம் ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு ‘கட்டு சோறு’ எனவும் வழங்கும். சோற்று… Read More »மூட்டை கட்டல்

மூட்டிவிடுதல்

சொல் பொருள் மூட்டிவிடுதல் – கோள் கூறல் சொல் பொருள் விளக்கம் இரு பக்கத்தை இணைத்து ஒன்றாக்கல் இயைத்தல், இசைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான்காக்கிப்… Read More »மூட்டிவிடுதல்

மூச்சுவிட மறத்தல் – சாதல்

சொல் பொருள் மூச்சுவிட மறத்தல் – சாதல் சொல் பொருள் விளக்கம் பேச மறத்தல் என்பது போன்ற வழக்கே மூச்சுவிட மறத்தல் என்பதாம். மூச்சே உயிர், மூச்சு அடங்குதல் உயிர் போதலாம். ஒடுக்கம் அடக்கம்… Read More »மூச்சுவிட மறத்தல் – சாதல்

மூச்சு

சொல் பொருள் மூச்சு – பேசாதே சொல் பொருள் விளக்கம் ‘மூச்சு’ என்றாலே அழுகையை அடக்கு; வாயைத் திறவாதே; பேசாதே என்னும் பொருளைத் தரும் வழக்குகள் உள. அழும் குழந்தை, ஓயாது பேசும் குழந்தை… Read More »மூச்சு

மூக்கறுத்தல்

சொல் பொருள் மூக்கறுத்தல் – இழிவுறுத்தல் சொல் பொருள் விளக்கம் இடைக்காலப் போராட்டங்களுள் மூக்கறுப்புப் போராட்டம் ஒன்று. மைசூர் மன்னர் படைஞர் மூக்கை முகவை அரசர் படைஞர் திருமலை மன்னருக்காக அறுத்த செய்தி வரலாற்றில்… Read More »மூக்கறுத்தல்