Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பதம்பார்த்தல்

சொல் பொருள் பதம்பார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம்.… Read More »பதம்பார்த்தல்

பண்ணையடித்தல்

சொல் பொருள் பண்ணையடித்தல் – அக்கறையாக வேலை செய்தல் சொல் பொருள் விளக்கம் பண்ணை என்பது உழவர் பெருங்குடி; அக்குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர் பண்ணையில்… Read More »பண்ணையடித்தல்

படையெடுத்தல்

சொல் பொருள் படையெடுத்தல் – கூட்டமாக வருதல் சொல் பொருள் விளக்கம் வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக்கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவதுண்டு.… Read More »படையெடுத்தல்

படையல் போடல்

சொல் பொருள் படையல் போடல் – தெய்வப் படையல், உழையாத் தீனி சொல் பொருள் விளக்கம் படைத்துவைப்பது படையல் ஆகும். சோறு கறி பண்டம் ஆகியவற்றைத் தெய்வப் படையலாகப்படைப்பது வழக்கம். அது ‘படைப்பு’ என்றும்… Read More »படையல் போடல்

படுத்துவிடுதல்

சொல் பொருள் படுத்துவிடுதல் – செயலற்றுப் போதல் சொல் பொருள் விளக்கம் ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றன் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது. சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது;… Read More »படுத்துவிடுதல்

படுக்காளி

சொல் பொருள் படுக்காளி – ஒழுக்கக்கேடன் சொல் பொருள் விளக்கம் படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு… Read More »படுக்காளி

படியளத்தல்

சொல் பொருள் படியளத்தல் – உதவுதல் சொல் பொருள் விளக்கம் கூலிவேலை செய்வார் வேலைமுடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக்கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத் தவசம் உதவியாதலால்… Read More »படியளத்தல்

படிதாண்டாமை

சொல் பொருள் படிதாண்டாமை – கற்புடைமை சொல் பொருள் விளக்கம் படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையென்றால் படியைத் தாண்டாமல் யாரால் தான் இருக்க முடியும்? வாயிற்படி மட்டும் தானா… Read More »படிதாண்டாமை

படபடத்தல்

சொல் பொருள் படபடத்தல் – கோபப்படல் சொல் பொருள் விளக்கம் கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித்துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய் உதடு துடிதுடித்தல் இவையெல்லாம் சீற்றத்தின் குறிகள் பித்தப் படபடப்பென ஒரு… Read More »படபடத்தல்

படங்காட்டல்

சொல் பொருள் படங்காட்டல் – பகட்டுதல் நடித்தல் சொல் பொருள் விளக்கம் கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னாக நின்று மேலலுவலர் பாராட்டைப் பெற்று விடுவதுண்டு. அத்தகையரைப்… Read More »படங்காட்டல்