Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தாடியைத் தடவல்

சொல் பொருள் தாடியைத் தடவல் – கவலைப்படல் சொல் பொருள் விளக்கம் சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவலாம். தாடி இல்லாதவர் தாடையைத் தடவல் அவ்வகைத்தே. இழப்புக்கு… Read More »தாடியைத் தடவல்

தாட்டிகம்

சொல் பொருள் தாட்டிகம் – வலிமை, வல்லாண்மை சொல் பொருள் விளக்கம் தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய… Read More »தாட்டிகம்

தன் காலில் நிற்றல்

சொல் பொருள் தன் காலில் நிற்றல் – பிறர் உதவி கருதாதிருத்தல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன்… Read More »தன் காலில் நிற்றல்

தறிகெட்டவன்

சொல் பொருள் தறிகெட்டவன் – நிலைத்து ஓரிடத்து அமையாதவன் சொல் பொருள் விளக்கம் தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி கட்டுத்தறி. கட்டுத்துறை எனவும்… Read More »தறிகெட்டவன்

தளைபோடுதல்

சொல் பொருள் தளைபோடுதல் – திருமணம் செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் கழுதைக்குத் தளைபோடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைத்து விட்டால் அது ஓடிப்போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளையாவது கட்டு.… Read More »தளைபோடுதல்

தளுக்குதல்

சொல் பொருள் தளுக்குதல் – நடிப்பால் மயக்குதல் சொல் பொருள் விளக்கம் தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர்.… Read More »தளுக்குதல்

தள்ளமாட்டாமை

சொல் பொருள் தள்ளமாட்டாமை – அகற்ற முடியாத நெருக்கம் சொல் பொருள் விளக்கம் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய… Read More »தள்ளமாட்டாமை

தலையைக் குலுக்கல்

சொல் பொருள் தலையைக் குலுக்கல் – மறுத்தல் சொல் பொருள் விளக்கம் தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்குதலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு… Read More »தலையைக் குலுக்கல்

தலையில் அடித்தல்

சொல் பொருள் தலையில் அடித்தல் – உறுதி கூறல் சொல் பொருள் விளக்கம் ‘தலையில் அடித்துச் சொல்கிறேன்’ என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின்… Read More »தலையில் அடித்தல்

தலையிடுதல்

சொல் பொருள் தலையிடுதல் – பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல் சொல் பொருள் விளக்கம் “எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை” என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக வேண்டா என்னும் பொருளாக… Read More »தலையிடுதல்