Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கிண்டிக்கிழங்கெடுத்தல்

சொல் பொருள் கிண்டிக்கிழங்கெடுத்தல் – மற்றவை வெளிப்படுத்தல், கடுந்துன்புக்காளாக்கல் சொல் பொருள் விளக்கம் கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் – எட்டடி பத்தடி ஆழத்திற்கு… Read More »கிண்டிக்கிழங்கெடுத்தல்

காற்றுப்பிரிதல்

சொல் பொருள் காற்றுப்பிரிதல் – அடைப்பு அகலல் சொல் பொருள் விளக்கம் மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை. உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் இவை.… Read More »காற்றுப்பிரிதல்

காற்றாடல்

சொல் பொருள் காற்றாடல் – வணிகம் நடவாமை சொல் பொருள் விளக்கம் உலாவப் போதல் ‘காற்றாடல்’ எனப்படும். வேலையொன்றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக்காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது.… Read More »காற்றாடல்

காளி

சொல் பொருள் காளி – சீற்ற மிக்கவள் சொல் பொருள் விளக்கம் சீற்றம் மிக்குப்பேசுபவள், தலைவிரி கோலமாகத் திரிபவள்,மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க்கூச்சல் போட்டு ஊரைக்கூட்டுபவள் ஆகியவளைக் ‘காளி’ என்பது வழக்கு.… Read More »காளி

காலை வாரல்

சொல் பொருள் காலை வாரல் – கெடுத்தல், நம்பிக்கை இழப்பு சொல் பொருள் விளக்கம் காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலைவாரல். காலை வாருதல் என்பது வீழ்த்துதல் பொருளது. “அவனை நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என்… Read More »காலை வாரல்

காலைப் பிடித்தல்

சொல் பொருள் காலைப் பிடித்தல் – பணிந்து வேண்டுதல் சொல் பொருள் விளக்கம் இறைவன் திருவடியை வணங்கல் பழஞ்செய்தி. அவ்வாறே தோற்றுப் போன வீரர்கள் தங்கள் கருவிகளை வெற்றி பெற்றவர் காலடியில் வைத்து அடைக்கலம்… Read More »காலைப் பிடித்தல்

காலைச் சுற்றல்

சொல் பொருள் காலைச் சுற்றல் – நெருக்கி வளைத்தல் சொல் பொருள் விளக்கம் கொடி காலைச் சுற்றும்; வைக்கோற் புரி, கயிறு ஆகியவையும் காலைச் சுற்றும். சில வகைப் பாம்புகளும் தீண்டிவிட்டு ஓடாமல் காலைச்… Read More »காலைச் சுற்றல்

காலைக்கட்டுதல்

சொல் பொருள் காலைக்கட்டுதல் – கவலைப்படுதல் சொல் பொருள் விளக்கம் காலைக் கட்டுதல். அயலார் கட்டுதல் அன்று. தானே தன் காலைக் கட்டுதல் ஆகும்? கப்பல் கவிழ்ந்தாலும் காலைக் கட்டலாமா? கன்னத்தில் கை வைக்கலாமா?… Read More »காலைக்கட்டுதல்

கால் வைத்தல்

சொல் பொருள் கால் வைத்தல் – வருதல், குடிபுகுதல் சொல் பொருள் விளக்கம் கால் வைத்தல்; காலை நிலத்தில் அல்லது ஓரிடத்தில் வைத்தல் என்னும் பொருளில் விரிந்து ‘வருதல்’ என்னும் பொருளில் வருவது வழக்காகும்.… Read More »கால் வைத்தல்

கால்வழி

சொல் பொருள் கால்வழி – மக்கள் சொல் பொருள் விளக்கம் கான்முளை என்பதும் இப்பொருளதே. கால்வழி என்பது வாழையடி வாழையென வரும் மரபுத் தொடர்ச்சியாகும். கால் என்பதற்கு ஊன்றுதல் முளைத்தல் எனப் பலபொருள்கள் உண்டு.… Read More »கால்வழி