Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கட்டிக் கொள்ளல்

சொல் பொருள் கட்டிக் கொள்ளல் – திருமணம் செய்தல் சொல் பொருள் விளக்கம் திருமணம் செய்தலைத் ‘தாலிகட்டு’ என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம்பெறுவது, தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப்… Read More »கட்டிக் கொள்ளல்

கட்டிக் கொடுத்த சோறு

சொல் பொருள் கட்டிக் கொடுத்த சோறு – கற்றுக்கொடுத்த கல்வி சொல் பொருள் விளக்கம் கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அதுபோல், கற்றுக் கொடுத்த… Read More »கட்டிக் கொடுத்த சோறு

கஞ்சி காய்ச்சல்

சொல் பொருள் கஞ்சி காய்ச்சல் – கிண்டல் செய்தல் சொல் பொருள் விளக்கம் கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய புல்லிய தவசங்களை இடித்து அரைத்து மாவாக்கி ஊறவைத்தும் புளிப்பாக்கி உலையிட்டுத் துடுப்பால் கிண்டிக் கிண்டிக்… Read More »கஞ்சி காய்ச்சல்

கசிதல்

சொல் பொருள் கசிதல் – அன்புறுதல் சொல் பொருள் விளக்கம் புது மண் பானையில் நீர்வைத்தால் கசிவு உண்டாகும். அதுபோல் குளக்கரை, வயற்கரை, வரப்பு ஆகியவற்றிலும் நீர் உள்ளபோது கசிவுண்டாம். கசிதல் என்பது நீர்… Read More »கசிதல்

கசக்கிப் பிழிதல்

சொல் பொருள் கசக்கிப் பிழிதல் – கடுமையாய் வேலை வாங்கல் சொல் பொருள் விளக்கம் பழங்களைக் கசக்குதலும், கசக்கியதைப் பிழிந்து சாறு எடுத்தலும் நடைமுறைச் செய்தி. அதுபோல் சிலரை வாட்டி வேலை வாங்கி அவ்வேலையால்… Read More »கசக்கிப் பிழிதல்

கச்சை கட்டல்

கச்சை கட்டல்

கச்சை கட்டல் என்பதன் பொருள் ஏவிவிடல், தூண்டி விடுதல் சொல் பொருள் கச்சை கட்டல் – ஏவிவிடல் கலகம் செய்ய தூண்டி விடுதல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் provoke  சொல் பொருள் விளக்கம் கச்சை என்பது இடுப்பில்… Read More »கச்சை கட்டல்

ஓலுப்படல்

சொல் பொருள் ஓலுப்படல் – அல்லலுறல் சொல் பொருள் விளக்கம் ஓலுறுத்தல் விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ்வுறுத்தல் பொருளது. செல்வக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுள் ஒருத்தி ‘ஓலுறுத்தும் தாய்’ அவ்வோலுறுத்தல் குழந்தையின் அழுகை அமர்த்தி… Read More »ஓலுப்படல்

ஓடெடுத்தல்

சொல் பொருள் ஓடெடுத்தல் – இரந்துண்ணல் சொல் பொருள் விளக்கம் துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு, தேங்காய் ஓடு போன்றதாகிய ஒரு மரத்தின் காயோடேயாகும். துறவுமேற்கொள்ளாத… Read More »ஓடெடுத்தல்

ஓடவில்லை

சொல் பொருள் ஓடவில்லை – தெளிவாகவில்லை; செயல்பட முடியவில்லை சொல் பொருள் விளக்கம் திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்து விடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்து விடலாம். அந்நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும்… Read More »ஓடவில்லை

ஓட்டைக்கை

சொல் பொருள் ஓட்டைக்கை – சிக்கனமில்லாத கை சொல் பொருள் விளக்கம் ஓட்டைப் பானையோ சட்டியோ, உள்ள பொருளை ஒழுக விட்டுவிடும். ஓட்டைப் பானையைப், பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர்… Read More »ஓட்டைக்கை