Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

படுப்பனை

சொல் பொருள் படுக்கும் இடம் சொல் பொருள் விளக்கம் படுக்கும் இடம் என்னும் பொருளில் திட்டுவிளை வட்டாரத்தில் படுப்பனை என்னும் சொல் வழங்குகின்றது. கொள்வது கொள்வனை எனவும், கொடுப்பது கொடுப்பனை எனவும் வழங்குவது போலப்… Read More »படுப்பனை

படுசாவு

சொல் பொருள் இயல்பாக இறக்கும் இறப்பைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் படுகிடை என்பது நெடுங்காலம் படுத்துக் கிடக்க வைக்கும் நோய் ஆகும். அவ்வாறு சாவும் சாவு திடுமென்று குத்து, வெட்டு, நேர்ச்சி,… Read More »படுசாவு

படுகை

சொல் பொருள் நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும் சொல் பொருள் விளக்கம் நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும். படிப்படியாகப் படிவதே படிகை. படுகை என மக்கள் வழக்கில் ஆயது.… Read More »படுகை

படுக்கை

சொல் பொருள் படையல் வகை சொல் பொருள் விளக்கம் தெய்வத்திற்கு இடும் படையல் வகையுள் ஒன்றாகச் சீர்காழி வட்டாரத்தில் படுக்கை என்பது வழங்குகின்றது. படுக்கை என்பது புலால் கலவாத படையல் என்பதாம். படுக்கை பரப்பிவைத்தல்… Read More »படுக்கை

படிவால்

சொல் பொருள் ஓடை சொல் பொருள் விளக்கம் கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படிவால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங்கோடு… Read More »படிவால்

படிப்புரை

சொல் பொருள் ஒட்டுத் திண்ணை என்பது பொருள் சொல் பொருள் விளக்கம் படி என்பது வாயில் நுழைவில் இருப்பது. அதற்கு இருபாலும் திண்ணை அமைப்பது பெருவழக்கு. குடிசை வீடு எனினும்கூட அவ் வழக்கம் சிற்றூர்களில்… Read More »படிப்புரை

படித்தம்

சொல் பொருள் கல்வி கற்பதைக் குறிக்கும் சொல் பொருள் விளக்கம் படிப்பு என்பது கல்வி கற்பதைக் குறிக்கும். அது பொது வழக்கு. குமரி மாவட்டத்தில் கல்வி கற்பதைப் படித்தம் என்கின்றனர். படி என்பது வகுப்பு… Read More »படித்தம்

படக்கு

சொல் பொருள் வெடி சொல் பொருள் விளக்கம் வெடி வெடித்தல், வெடி போடுதல் என்பது பொது வழக்கு. வெடியை வேட்டு என்பதும் பொது வழக்கே. ஆனால் வேட்டு தீப் பற்றிய அளவில் பட்டென வெடிப்பதால்… Read More »படக்கு

பட்டியாள் நேரம்

1. சொல் பொருள் இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்குநாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பட்டி… Read More »பட்டியாள் நேரம்

பட்டியல் கல்

சொல் பொருள் திண்ணைக்கு ஒப்பாக அமைக்கப்படுவது சொல் பொருள் விளக்கம் வீட்டு முற்றங்களில் பட்டியல் கல் போட்டு, இருத்தலும் படுத்தலும் நாட்டுப்புற வழக்கு. பட்டையான கல், பட்டியல் கல். அகலமும் நீளமும் உடையது. திண்ணைக்கு… Read More »பட்டியல் கல்