Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

நம்மட்டி

சொல் பொருள் மண்வெட்டி சொல் பொருள் விளக்கம் மண்வெட்டி என்பது, கொச்சை வழக்கில் மம்பெட்டி, மம்பட்டி என வழங்குதல் பொது வழக்காகும். அது நம்மட்டி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். இது, கொச்சையிலும்… Read More »நம்மட்டி

நப்பி

சொல் பொருள் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல்… Read More »நப்பி

நத்தைமண்

சொல் பொருள் கருஞ்சேற்று மண் சொல் பொருள் விளக்கம் நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது.… Read More »நத்தைமண்

நத்துதல்

சொல் பொருள் ஓயாது விரும்பி உண்பதும் வாய்த்ததை எல்லாம் துய்ப்பதுமாக இருத்தலை நத்துதல் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் நத்தை ஓய்வு ஒழிவு இல்லாமல் மண்ணை உண்டு கொள்ளுவ கொண்டு தள்ளும்… Read More »நத்துதல்

நடையன்

சொல் பொருள் நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல்லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு சொல் பொருள் விளக்கம் நடப்பவன்… Read More »நடையன்

நடுக்கூறு

சொல் பொருள் நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் நடுப்பகுதி, நடுப்பாகம் என்னும் பொருளமைந்த நடுக்கூறு என்னும் சொல்லுக்கு நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக… Read More »நடுக்கூறு

நட்டணை

சொல் பொருள் சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும் பிறரை மதியா திருத்தலுமாம். சொல் பொருள் விளக்கம் சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை… Read More »நட்டணை

நங்கை

சொல் பொருள் பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு சொல் பொருள்… Read More »நங்கை

நங்கு

சொல் பொருள் நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. நல்லது என்னும்… Read More »நங்கு

நக்கல்

சொல் பொருள் கேலிசெய்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது சொல் பொருள் விளக்கம் நகுதல், நகைத்தல், நகை என்பன எள்ளுதல் பொருளில் வருவன. “எள்ளல்… Read More »நக்கல்