Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

சுழைதல்

சொல் பொருள் சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது.… Read More »சுழைதல்

சுழலி

சொல் பொருள் கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந்நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச்… Read More »சுழலி

சுழற்றி

சொல் பொருள் துளையிடப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். சுற்றித் திருகுதலே துரப்பணத்தின் செயற்படுத்தம் ஆதலால், அதனை ஒப்பச் சுழற்றுதல் என்னும் சொல்லால் வழங்குதல் சிவகாசி வட்டாரத்தில் தச்சுத் தொழிலர் வழக்கில் உள்ளது சொல்… Read More »சுழற்றி

சுருள்

சொல் பொருள் சுருள் என்பது ‘கஞ்சா’ என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சுருள் என்பது ‘கஞ்சா’ என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது.… Read More »சுருள்

சுருத்து

சொல் பொருள் சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சுரிதல் என்பது சுழல்தல். சுரிதகம் என்பது கலிப்பா உறுப்புகளின் முடிநிலை.… Read More »சுருத்து

சுரயம்

சொல் பொருள் காய்ச்சல். சுரம் என்னும் பொது வழக்குச் சொல் நாகர்கோயில் வட்டாரத்தில் ‘சுரயம்’ என்று வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் சுர் என்பது சூடு, சுடர் என்பவற்றின் அடிச்சொல் வெப்பப் பொருள் தருவது.… Read More »சுரயம்

சுரக்கட்டை

சொல் பொருள் தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு சொல் பொருள் விளக்கம் தவளை பல்வேறு… Read More »சுரக்கட்டை

சிவனி

சொல் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச்… Read More »சிவனி

சுணக்கு

சொல் பொருள் ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பதுபொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது… Read More »சுணக்கு

சுண்டு

சொல் பொருள் சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை… Read More »சுண்டு